பெற்றோரின் திருமணத்தை பார்த்த சம்பவம் விஜய்க்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு - எஸ்.ஏ சந்திரசேகர்

பெற்றோரின் திருமணத்தை பார்த்த சம்பவம் விஜய்க்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு - எஸ்.ஏ சந்திரசேகர்
நடிகர் தனது பெற்றோர் உடன் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: December 4, 2019, 8:54 AM IST
  • Share this:
பெற்றோரின் திருமணத்தை 6 வயதில் பார்த்த சம்பவம் தன் மகனுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது துணைவியார் ஷோபா இருவரும் புத்தகங்களை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர், சினிமா ஆசையால் மதுரையில் இருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு வந்தபோது திண்டுக்கல்லில் பரிசோதகர் இறக்கி விட்டதாக கூறினார். பின்னர் மீண்டும் டிக்கெட் எடுக்காமல் வந்ததால் திருச்சியில் இறக்கி விடப்பட்டு எப்படியோ கஷ்டப்பட்டு சென்னை வந்ததாக தெரிவித்தார்.


ஷோபாவை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்ததாகவும், கிறிஸ்தவ முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டபோது விஜய்க்கு 6 வயது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

சென்னையில் தங்குவதற்கு வீடு கொடுத்தவரின் மகள் ஷோபாவை தான் காதலித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading