ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தோப்புக்கரணம்.. அன்னதானம்.. வாரிசு வெற்றிக்காக கோயில் படியேறும் விஜய் ரசிகர்கள்!

தோப்புக்கரணம்.. அன்னதானம்.. வாரிசு வெற்றிக்காக கோயில் படியேறும் விஜய் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை

விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை

Varisu fans prayer : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் ஆங்காங்கே உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதே போன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், நடிகர் விஜய்யின் பேரில் கோயிலில் அர்ச்சனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோருக்கு கோவிலுக்கு வெளியில் ஏழை எளிய சாலையோரம் வசிப்பவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் போது விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்ற பதாகையை கையில் வைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் திரைப்பட போஸ்டருடன் வந்த விஜய் ரசிகர்கள் மாயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

செய்தியாளர்: ராஜசேகர், மயிலாடுதுறை. 

செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Varisu, Vijay fans