Home /News /entertainment /

இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் விரைவில் என்ட்ரி… ப்ரொஃபைல் ரெடி

இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் விரைவில் என்ட்ரி… ப்ரொஃபைல் ரெடி

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

Vijay in Instagram - ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை விடவும் 2k கிட்ஸ்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ரசிகர்களும் விஜய்யின் இன்ஸ்டா என்ட்ரியை எதிர்பார்த்துள்ளனர்.

    பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் விரைவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தென்னிந்தியாவில் மிக அதிகமான ஃபாலோயர்ஸை கொண்ட நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்து வருகிறார். ட்விட்டரில் தனது படம் தொடர்பான அப்டேட்டுகளை மட்டும் வெளியிடுகிறார் விஜய்.

    ActorVijay என்ற பெயரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் விஜய்யின் ப்ரொஃபைல் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் ஃபேஸ்புக்கில் மட்டும் 78 லட்சம் ஃபாலோயர்களையும், ட்விட்டரில் 39 லட்சம் ஃபாலோயர்களையும் விஜய் பெற்றிருக்கிறார். இரு ப்ரொஃபைல்களும் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ஆக்டிவாக இருப்பது ட்விட்டரில் மட்டுமே.

    பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா?

    ஃபேஸ்புக்கில் கடைசியாக 2020 ஜனவரி 27ம்தேதி பதிவிட்டுள்ளார் விஜய். ட்விட்டரைப் பொருத்தளவில் தனது வாரிசு படத்தின் 3 போஸ்டர்களை வரையில் விஜய் பதிவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விரைவில் விஜய் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதற்காக actorvijay என்ற ப்ரொஃபைல் உருவாக்கப்பட்டு ப்ரைவேட் மோடில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விரைவில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளையிட விஜய் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

    ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?

    படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள 3 போஸ்டர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை விடவும் 2k கிட்ஸ்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ரசிகர்களும் விஜய்யின் இன்ஸ்டா என்ட்ரியை எதிர்பார்த்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி