Home /News /entertainment /

கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய் தேவரகொண்டாவின் லைகர்…

கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய் தேவரகொண்டாவின் லைகர்…

லைகர் படத்தின் போஸ்டர்

லைகர் படத்தின் போஸ்டர்

Liger Movie Review : லைகர் படத்திற்காக கடுமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு விஜய் தேவரகொண்டா சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்று வெளியான விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    விஜய் தேவர கொண்டா, ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம் இன்று வெளியானது.

    இந்த படத்தில் முன்னாள் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்துள்ளார் என்பதால் படத்தின் மிதான எதிர்பார்ப்பு அதிகம்காணப்பட்டது.

    இந்த படத்திற்காக கடுமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு விஜய் தேவரகொண்டா சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியான லைகர் படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்துள்ளன.

    லைகர் படத்தை தமிழ்நாட்டில் ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான லைகர் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

    பலவீனமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள், படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.











    சுமார் 2 ஆண்டுகளாக லைகர் படத்திற்காக படக்குழுவினர் உழைத்த நிலையில் படத்தின் ரிசல்ட் அவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

    லைகர் படத்தை இயக்குனர் புரி ஜெகன்னாத்தின் புரி கனெக்ட்ஸ் மற்றும் இயக்குனர் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay devarakonda

    அடுத்த செய்தி