சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த விஜய்!

news18
Updated: May 19, 2019, 8:16 PM IST
சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த விஜய்!
சிவகார்த்திகேயன்
news18
Updated: May 19, 2019, 8:16 PM IST
விஜய் தேவரகொண்டா படத்தால் சிவகார்த்திகேயனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது

சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

முன்னதாக இரண்டு படங்களுக்கு ஒரே டைட்டிலை தயாரிப்பாளர் சங்கம் வழங்கியிருந்தது. சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் விஜய் தேவரகொண்டா படக்குழு தங்களது பட டைட்டிலை மாற்றிக் கொள்ளவில்லை. இரண்டு படங்களில் யார் டைட்டிலை மாற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

2 படங்களுக்கு ஒரே டைட்டில் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம் - அம்பலமானது ஆதாரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மிஸ்டர் லோக்கல் படம் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் விஜய் தேவரகொண்டா படத்தால் அடுத்த சிக்கலில் சிக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.இதையும் படிங்க: Mr.லோக்கல் படத்திற்கு சிவகார்த்திகேயனின் விமர்சனம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் வீடியோ!

பார்க்க: தல 60 அப்டேட்: 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி?

First published: May 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...