முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லைக்ஸை அள்ளும் விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட பாடல்…

லைக்ஸை அள்ளும் விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட பாடல்…

லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே

லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அனன்யா பாண்டே லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

  • Last Updated :

லைகர் படத்திலிருந்து இன்று வெளியிடப்பட்ட ஆஃபாத் என்ற பாடல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக லைகர் திரைப்படம் உள்ளது. இதனை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

மைக் டைசன் படத்தில் இடம்பெற்றிருப்பதால் லைகர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்திலிருந்து ஆஃபாத் என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

லைகர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என சான்றிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 7 சண்டைக்காட்சிகளும், 6 பாடல்களும் இருப்பதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

' isDesktop="true" id="782431" youtubeid="krkp9TwLo-8?list=PLHuHXHyLu7BFzhNi_IcQAvo2cJ0_9DhT4" category="cinema">

விஜய் தேவரகொண்டா லைகர் கேரக்டருக்காக உடலளவில் மாற்றங்களை செய்துள்ளார். தான்நடித்த படங்களிலேயே அதிக உடல் வலியை கொடுத்த படம் லைகர் என்று அவர் கூறியுள்ளார்.

Sita Ramam Movie Review : துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தில் குத்துச் சண்டை மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக விஜய் நடித்திருக்கிறார்.

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அனன்யா பாண்டே லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய்க்கு அம்மாவாக இடம்பெறும் ரம்யா கிருஷ்ணனின் காட்சிகள் வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Vijay devarakonda