ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH | ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ்.. பவுலிங் கிஸ்.. ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்கவிட்ட நடிகர் விஜய்!

WATCH | ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ்.. பவுலிங் கிஸ்.. ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்கவிட்ட நடிகர் விஜய்!

விஜய்

விஜய்

வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா என்ற இரண்டு பாடல்களும் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தத்திற்கு மத்தியில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், விழா மேடையில் பேசிய நடிகர் விஜய், "அண்ணனின் அன்பு; தனக்கு தானே போட்டியாளர்" என வழக்கம்போல் ரசிகர்களுக்கு குட்டிக் கதைகள் பல கூறினார்.

தொடர்ந்து வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா என்ற இரண்டு பாடல்களும் வெளியானது. மேடையில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கு மேடையில் இருந்தவாறு ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக பவுலிங் போட்டுக்கொண்ட ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தது.

முன்னதாக இசை வெளியீட்டு விழாவிற்கு பாஸ் கிடைக்காத ரசிகர்களில் சிலர் தடையை மீறி உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

First published:

Tags: Actor Vijay, Varisu, Vijay, Vijay speech