லண்டனில் தீபாவளி கொண்டாடும் விஜய்!

லண்டனில் தீபாவளி கொண்டாடும் விஜய்!
பிகில் விழாவில் மனைவியுடன் விஜய்
  • News18
  • Last Updated: September 25, 2019, 6:30 PM IST
  • Share this:
நடிகர் விஜய் லண்டனில் தீபாவளி கொண்டாட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் அப்பா - மகம்ன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தைத் திரையில் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் பிகில் படத்தின் பணிகளை முடித்திருக்கும் நடிகர் விஜய் லண்டன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரைத் தொடர்ந்து அவரது மனைவி சங்கீதா, மகள் சாஷா, மகன் சஞ்சய் ஆகியோரும் தீபாவளிக்கு லண்டன் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


அங்கிருக்கும் தனது மனைவி சங்கீதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பிகில் படத்தை காண விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் விஜய் சென்னையில் உள்ள காசி உள்ளிட்ட ஏதாவது ஒரு திரையரங்கில் தீபாவளியன்று ரிலீசாகும் படத்தைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இந்தமுறை லண்டனில் பிகில் படத்தைக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்

Loading...

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...