பெட்ரோல் விலை உயர்வை மறைமுகமாக எதிர்க்கிறாரா விஜய்?

பெட்ரோல் விலை உயர்வை மறைமுகமாக எதிர்க்கிறாரா விஜய்?

சைக்கிளில் வந்த விஜய்

நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச் சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்களான நடிகரான ரஜினிகாந்த், அஜித், சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோரும் காலையிலேயே வந்து வாக்களித்தனர். அஜித் வாக்குச் சாவடிக்கு வந்த போது ரசிகர் கூட்டம் கூடியது. அதில் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது அவரது செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்ட அஜித் ரசிகர்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினார்.

அதேபோல் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக பேசப்படுகிறது. அவர் சைக்கிளில் வந்த போது போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் இருபுறமும் தலைவா என்ற கோஷத்தோடு இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் பேரணியாக வந்தனர்.

வாக்களித்து முடித்த பின் மீண்டும் தனது சைக்கிளில் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்த விஜய் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்கூட்டரில் அங்கிருந்து திரும்பினார். திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான விஜய் சைக்கிளில் வந்து வாக்குச் செலுத்தியிருப்பது அனைவரிடமும் கவனம் பெற்று வருகிறது.
Published by:Sheik Hanifah
First published: