Home /News /entertainment /

மெர்சல் டு மாஸ்டர்: Hotstar, Amazon, Netflix -ல் தளபதி விஜய்யின் மெகா ஹிட் படங்கள்!

மெர்சல் டு மாஸ்டர்: Hotstar, Amazon, Netflix -ல் தளபதி விஜய்யின் மெகா ஹிட் படங்கள்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற தளங்களில் வெளியாகியுள்ள 5 சிறந்த விஜய் திரைப்படங்களை குறித்து விரிவாக காண்போம்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் போற்றி கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு வயது 47 என்றாலும், இன்னும் இளமையான தோற்றத்தாலும், துடிப்பான நடிப்பாலும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தென்னிந்திய சினிமா பாலிவுட்  திரையுலகிற்கு உத்வேகம் அளிப்பதால், விஜய்யின் ஒரு சில வெற்றி படங்கள் கூட ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், முன்னணி பிரபலங்கள் உட்பட எண்ணற்ற நடிகர், நடிகைகளின் படங்கள் OTT தளங்களில் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வகையில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படமும், திரையரங்குகளில் வெளியான ஒரு வாரம் கழித்து அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. அதேபோல நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களும் OTT தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வகையில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற தளங்களில் வெளியாகியுள்ள 5 சிறந்த விஜய் திரைப்படங்களை குறித்து விரிவாக காண்போம்.

1. மாஸ்டர்: அமேசான் பிரைம் வீடியோ

2021ம் ஆண்டு நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ஆக்ஷன் த்ரில்லர் மாஸ்டர் படமானது நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது. மேலும் இந்த படம் ரிலீசாகி பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கையில் மட்டுமே அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விசில் சத்தம், ஆரவாரம் என தியேட்டர்களில் ரசிகர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. இந்த புதிய 2021 வெளியீடு, ஐஎம்டிபியின் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய திரைப்படமாகும்.Also Read:  பவுன்சர் பந்துவீச்சை இப்படியா அடிப்பார்கள்: இர்ஃபான் பதானின் WTC Final விமர்சனம்

2. மெர்சல்: நெட்ஃபிக்ஸ்

மெர்சல் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய மற்றொரு பிளாக் பாஸ்டர் திரைப்படம். இது ஒரு பழிவாங்கும் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம். பிரிந்த இரண்டு சகோதரர்களின் பின்னணி வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் தொடக்கத்தில் விஜய் மருத்துவர், மற்றும் மாயாஜாலம் செய்யும்  மேஜிக்மேன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இரு சகோதரர்களும் தங்கள் பெற்றோரின் அகால மரணத்திற்குப் பழிவாங்குவதற்காகவும், படத்தின் போக்கில் தங்கள் உறவை சரிசெய்யவும் ஒன்றாக இணைகின்றனர். இந்த படத்தில் மூன்றாவது கதாபாத்திரத்திலும் விஜய் நடித்துள்ளார். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கதையின் சுவாரஸ்யம் குறையாது.3. துப்பாக்கி: டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய துப்பாக்கியில் ஒரு இந்திய ராணுவ அதிகாரியாக விஜய்யின் வாழ்க்கையைப் பின்பற்றும் ஒரு அதிரடி திரில்லர். தீவிரவாதியால் திட்டமிடப்படும் சதி செயல் குறித்து தெரிந்ததும், அதில் யாருக்கு தொடர்பு இருக்கிறது. அவருடன் எத்தனை பேர் தொடர்பில் இருக்கின்றனர். தீவிரவாதிகளால் வழிநடத்தப்படும் ஸ்லீப்பர் செல்களை முடக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம், மும்பை மாநகரத்தில் ஏற்படவிருந்த அசம்பாவித செயலை விஜய் தடுத்து நிறுத்துவார்.

Also Read:   உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!இந்த படம் பல விருதுகளை வென்றது, மேலும் இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் முறையே ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி மற்றும் கேம் என மறுபெயரிடப்பட்டு ஒளிபரப்பட்டது. இந்த படம் தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்படுகிறது.

4. பிகில்: அமேசான் பிரைம் வீடியோ

அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களில் ஒன்று பிகில். அதுவும் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு திரையரங்குகளில் வந்த கடைசி திரைப்படமும் இதுதான். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த கதை மைக்கேல், ஒரு ஆக்ரோஷமான ஆனால் நல்ல மனம் படைத்த மனிதனைப் பற்றியது. அவரது தந்தையின் கொடூரமான இறப்புக்கு பிறகு ஒரு கால்பந்து வீரராக வேண்டும் என்ற அவரது லட்சியங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு பெண் கால்பந்து அணியைப் பயிற்றுவிக்க ஒரு நண்பர் சமாதானப்படுத்தும் போது மைக்கேல் இறுதியாக மீண்டும் வாய்ப்பை உருவாக்கி கொண்டார். பிகில் கால்பந்து விளையாட்டுத் திரைப்படங்களில் ஒன்றாகும். இது மிகவும் இணையான கதையோட்டங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. தலைவா: அமேசான் பிரைம் வீடியோ

2013 ஆம் ஆண்டில் வெளியான தலைவா ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக திகழ்ந்தது. சிட்னியில் ஒரு சிறு வணிகத்தை நடத்தி வரும் விஸ்வாவாக விஜய் நடித்துள்ளார். மும்பையில் உள்ள தனது கேங்க்ஸ்டர் தந்தையை சந்திக்க சென்ற போது எதிரிகளால் கொலை செய்யப்படுகிறார் அவரின் தந்தை. இதையடுத்து தந்தையின் இடத்தை தக்கவைத்து தன்னை நம்பி உள்ள மக்களுக்காக போராடுவது தான் கதைக்களம்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 
Published by:Arun
First published:

Tags: Actor vijay, Entertainment, Kollywood movies, OTT Release, Tamil Cinema

அடுத்த செய்தி