ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்

‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்

விஜய் பிறந்த நாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்

விஜய் பிறந்த நாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்

Vijay Birthday Poster : போஸ்டரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விஜய் போட்டோ இடம்பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வருங்கால முதல்வர் என்று தலைப்பிட்டு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலகத்தினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல உதவிகள், தமிழ் நாடு முழுவதும் இன்று செய்யப்படுகிறது. விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் 66 வது படத்தின் டைட்டில் வாரிசு நேற்று மாலை வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க - HBD Vijay: பிரியங்கா சோப்ரா டூ கத்ரீனா கைஃப்... விஜய்யுடன் ஜோடி போட்ட பாலிவுட் நடிகைகள்

இதேபோன்று விஜய்யை வாழ்த்தி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விஜய் போட்டோ இடம்பெற்றுள்ளது. வாழ்ந்த முதல்வர், வாழும் முதல்வர் நல்லாசியுடன் வருங்கால முதல்வருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - யுவன் இசையில் கானாப் பாட்டுப் பாடிய விஜய்!

வருங்கால முதல்வர் விஜய் என்று குறிப்பிடப்பட்டதால் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள 2 வாரிசு பட போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வாரிசு திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

First published:

Tags: Actor Vijay