நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, நடிகை கீர்த்தி சுரேஷ் கவிதையாக வாழ்த்து கூறியுள்ளார். வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ராஷ்மிகா மந்தனா இதுவரை பிறந்த நாள் வாழ்த்து சொல்லாதது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறது.
பிறந்த நாளையொட்டி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நல உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க - நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையும், சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தவருமான கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு கவிதை போல் வாழ்த்துக் கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘பூப்போல மனசு
ஏறாத வயசு
கோலிவுட்டின் வாரிசு
தி நேம் இஸ் தளபதி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் சார். இந்தாண்டும் உங்கள் படங்கள் வெறித்தனமான ஹிட்டாக அமைய வாழ்த்துகிறேன். தியேட்டரில் வாரிசு படத்தைக் காண எங்களால் காத்திருக்க முடியவில்லை.’ என்று கூறியுள்ளார்.
கீர்த்தியின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
இன்னொரு பக்கம் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். தற்போது வரை அவர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க - HBD Vijay: பிரியங்கா சோப்ரா டூ கத்ரீனா கைஃப்... விஜய்யுடன் ஜோடி போட்ட பாலிவுட் நடிகைகள்
நேற்று இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாலை 6.01-க்கு வெளியானது.
இதனை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், சுமார் 40 நிமிடங்கள் தாமதாக ராஷ்மிகா வெளியிட்டார். இன்று விஜய் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துப் பதிவு எதையும் ராஷ்மிகா வெளியிடவில்லை. வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் நிலையில் ராஷ்மிகா மவுனம் காப்பது விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.