நடிகர் விஜய் பிறந்தநாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

புதுச்சேரியில் ஏற்கனவே தனுஷிற்கு கடலுக்கு நடுவில் பிறந்த நாள் பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

 • Share this:
  நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பேனர் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. நகர பகுதியில் நடமாடும் டிவியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டனர்.

  இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் மன்றத்தினர் தொகுதி தலைவர் வசந்தராஜா தலைமையில் கிளைமன்றம் தலைவர் கில்லி செல்வா மற்றும் நிர்வாகிகள் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  புதுச்சேரியில் ஏற்கனவே தனுஷிற்கு கடலுக்கு நடுவில் பிறந்த நாள் பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

  Also read: Beast: தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ஆங்கில தலைப்புகள்.. காரணம் என்ன?

  புதுச்சேரியில் கடற்கரை சாலை காந்தி சிலைக்கு பின்னால் கடலுக்கு நடுவில் உள்ள பழைய ரயில்வே மரக்கட்டையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இப்படி பேனர் வைப்பது ரசிகர்களின் புதிய டிரண்டாகி விட்டது.
  Published by:Esakki Raja
  First published: