Home /News /entertainment /

பீஸ்ட் படத்தின் ரிலிஸ் தேதி, புதிய போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்

பீஸ்ட் படத்தின் ரிலிஸ் தேதி, புதிய போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்

பீஸ்ட்

பீஸ்ட்

Beast Poster | பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்து கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    பீஸ்ட் படத்தின் கதை தங்கக் கடத்தலை மையப்படுத்தியது என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதை பின்னணியாகக் கொண்டு பீஸ்ட் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருப்பதாகவும், அவர் பிரதான வில்லன்களில் ஒருவரான செல்வராகவனின் ஆளாக படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 2022 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி