Home /News /entertainment /

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகிறது... வைரலாகும் அப்டேட்

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகிறது... வைரலாகும் அப்டேட்

பீஸ்ட்

பீஸ்ட்

கே.ஜி.எஃப். 2 படத்துடன் பீஸ்ட் மோதுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பீஸ்ட்டும் ஏப்ரல் 14-ம்தேதியன்றே வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் படம் மெகாஹிட் ஆகியுள்ளதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.



    அனிருத் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன தளபதி விஜய் ஏப்ரல் மாதம் பீஸ்ட் வெளியாகும் என்ற அப்டேட்டை கொடுத்திருந்தார்.



     

    ஏப்ரல் 14-ம்தேதி இந்தியாவே எதிர்பார்க்கும் கே.ஜி.எஃப். பார்ட் 2 வெளியாகவுள்ளது. அந்தப் படத்துடன் பீஸ்ட் மோதுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பீஸ்ட்டும் ஏப்ரல் 14-ம்தேதியன்றே வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



     

    பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங் புத்தாண்டையொட்டி வெளியாகும் என தகவல்கள் பரவியது. இந்நிலையில் ஜனவரி 26-ம்தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Also Read : Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

    எனவே, ரசிகர்கள் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

    Also Read : Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
    Published by:Musthak
    First published:

    Tags: Beast

    அடுத்த செய்தி