Home /News /entertainment /

பீஸ்ட் பாடலின் ப்ரோமோ இசை காப்பியா? அனிருத்தைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

பீஸ்ட் பாடலின் ப்ரோமோ இசை காப்பியா? அனிருத்தைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

அனிருத்

அனிருத்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலும் காப்பி சர்ச்சையில் இணைந்திருப்பது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில் அதேவேகத்தில் அப்பாடல் காப்பி சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. 

    இன்றைய தேதியில் தென்னக அளவில் எல்லோராலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், அவ்வப்போது பாடல்களை காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருடைய இசையில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அப்பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    அரபிக் குத்து என்னும் பெயரில் வெளியாகியுள்ள அப்பாடலின் முன்னோட்டம்தான் இது.இது ஏற்கனவே வெளியான தீவானா ஹூன் தீவானா எனும் ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டறிந்து அதை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் யுவன் இசையில் வெளியான ரவுடி பேபி பாடலின் பீட்டை அப்படியே எடுத்து அனிருத் இப்பாடலில் பயன்படுத்தி இருப்பதாகவும் நெட்டிசன்கள் ரோல் செய்து வருகின்றனர்.

    Also Read: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

    பிற மொழி பாடல்களை காப்பியடித்து சர்ச்சையில் சிக்குவது அனிருத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. கத்தி படத்தில் விஜய்க்காக அனிருத் உருவாக்கிய அதிரடியான தீம் இசை தான் அது. ஆனால் இந்த தீம் இசை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு பாடலின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இதேபோல் அஜித்தின் வேதாளம் படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் இசையும் ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை காப்பியடித்து உருவாக்கப்பட்டதுதான் என்பதும் தெரியவந்து அனிருத்தின் இமேஜிற்கு களங்கத்தை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக காப்பி விவகாரதில் சிக்கி அனிருத்தின் ஒரு பாடலை யூடியூப் தளத்தில் இருந்தே நீக்கிய சம்பவமும் அரங்கேறியது. கோலமாவு கோகிலா படத்துக்காக அனிருத் இசையமைத்த 'எனக்கு கல்யாண வயசுதான்' பாடல் காப்புரிமை விவகாரதில் சிக்கி பின்னர் நீக்கப்பட்டது இசையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Also Read: தென்னிந்தியா வேற்று கிரகமா? - இந்திவாலாவை விளாசிய சுருதி ஹாசன்!

    விக்ரம் படத்தின் மூலம் முதல்முறையாக கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்திருக்கும் அனிருத் பழைய விக்ரம் படத்துக்காக இளையராஜா போட்ட இசையையே கொஞ்சம் மாடர்ன் வடிவில் மாற்றி இசை அமைத்திருந்தார். ஆனால் அந்த கொஞ்சம் மாற்றியதையும் காப்பி அடித்த அனிருத் அதே வேகத்தில் மாட்டிக்கொண்டு முழித்தார்.

    இந்த வரிசையில் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலும் இணைந்திருப்பது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்பாடல் உருவாக்க வீடியோவில் புதுமையான முறையில் அரபிக் மொழியையும் தமிழ் கலாச்சார குத்தையும் இணைத்து 'பேன் உலக பாடல்' என்றெல்லாம் பில்டப் கொடுத்தது இதற்குத்தானா எனவும் இணையவாசிகள் கேலி பேசி வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Anirudh, Beast, Sivakarthikeyan

    அடுத்த செய்தி