நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு 100வது நாளை எட்டியுள்ள நிலையில், படக்குழுவுடன் கூடிய புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ளார்.
It’s “100th day of shooting”
100 days of fun with these amazing people #Beast ❤️ @actorvijay @hegdepooja @sunpictures pic.twitter.com/kgspauE8CL
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 28, 2021
டிரம்ஸ் வாசித்தப்படி மிக கூலாக நடிகர் விஜய் உள்ளார். ரெட்டின் கிங்ஸ்லி, வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி என டாக்டர் படத்தில் நடித்தவர்கள் இந்த படத்திலும் நடிக்கின்றனர் என்பது புகைப்படத்தின் மூலம் தெளிவாகிறது. கூடுதலாக அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.