நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் புகைப்படம்

தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: March 6, 2019, 12:27 PM IST
  • Share this:
நடிகர் விஜய் தனது கார் ஓட்டுநரின் மகள் திருமண நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

நடிகர் விஜய்-அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.


இந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் 63 படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில் நடிகர் விஜய் தனது உதவியாளரும், ரசிகர் மன்றத்தின் துணைத்தலைவரான ராஜேந்திரனின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார்.அதற்கான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மார்கெட் சரிவின் போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நாயகிகள் - வீடியோ

First published: March 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்