முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் போட்டோஸ்

முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் விஜய் உடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
  • Share this:
நடிகர் முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த முரளி கடந்த 2010-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனது தந்தை வழியில் திரைத்துறையில் நடிகராக அதர்வா கால்பதித்த நிலையில், ஆகாஷூக்கு படம் இயக்குவதில் தான் அதிக ஆர்வம் என்று கூறப்படுகிறது. ஆகாஷ் லயோலா கல்லூரியில் படித்த சமயத்தில் சினேகா என்பவரை காதலித்து வந்துள்ளார். சினேகா ‘தளபதி 64’ படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள்.


ஆகாஷ் - சினேகாவின் காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.



இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவருடன் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் நடிகர் விஜய் தனது 64-வது படத்துக்காக ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.Cinema Roundup : ஃபர்ஸ்ட் லுக் கூட வரல அதுக்குள்ள ’விஜய் 64’ பிசினஸ் இத்தனை கோடியா...? ரவுடி பேபிக்கு இந்திய அளவில் முதலிடம்...



‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் கர்நாடகாவில் உள்ள சிறையில் தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்