Home /News /entertainment /

‘உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்’ - கொரோனா குறித்து விஜய் ஆண்டனி ட்வீட்

‘உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்’ - கொரோனா குறித்து விஜய் ஆண்டனி ட்வீட்

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

Vijay Antony : கொரோனா பரவலால் எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி ‘உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா தொற்று உலகின் பவ்வேறு நாடுகளில் மீண்டும் விஷ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால், உலக மக்கள் மீண்டும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி ‘உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 12.6 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் விகிதம், 5 முதல் 10 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பரவல் 10 மடங்காக அதிகரித்துள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்து 489 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையை விட கூடுதலாக ஆயிரத்து 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,14000 ஐக் கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2,547 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 ஆக ஆனது.

    ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மரணமடைந்தோர் எண்ணிக்கை 36,866 ஆகியுள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 62,767 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரானால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185 ஆக நீடிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மாவட்டங்களைப் பொறுத்தவரை, சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 186 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திங்கட்கிழமை 6 ஆயிரத்து 190 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ஆயிரத்து 696 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டை தொடர்ந்து திருவள்ளூரிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

    Must Read : பொங்கல் நாட்களில் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை

    திருவள்ளூரில் ஆயிரத்து 54 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 602 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் 508 பேரும், திருச்சியில் 348 பேரும், மதுரையில் 330 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னையில் 4 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

     



    இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona, Omicron, Vijay Antony

    அடுத்த செய்தி