Home /News /entertainment /

வெளியானது விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை படத்தின் ட்ரெய்லர்!

வெளியானது விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை படத்தின் ட்ரெய்லர்!

கொலை படத்தின் ட்ரெய்லர்.

கொலை படத்தின் ட்ரெய்லர்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கியுள்ள திரைப்படம் கொலை. கிரைம் திரில்லர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.



    Also read... நடிகர் அர்ஜூனின் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் 2-வது லுக் போஸ்டர் ரிலீஸ்

    கொலை திரைப்படத்தின் கதை ஒரு கொலையை கண்டுபிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  இறுதிவரை அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் என்று படக்குழு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது.



    சுதந்திர தினமான நேற்று கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை இயக்குநர் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Vijay Antony

    அடுத்த செய்தி