ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி… வைரலாகும் வீடியோ

ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி… வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி குத்தாட்டம் போட்டு கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  தமிழ் நாடக உலகில் முன்னோடி கலைஞராக இருந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். 1867 செப்டம்பர் 7 ஆம்தேதி தூத்துக்குடியில் பிறந்த இவர், 1922 நவம்பர் 13-ல் புதுச்சேரியில் காலமானார். தனது 24ஆவது வயதில் தான் பார்த்து வந்த கணக்கர் பணியை விட்டு விட்டு முழுவதுமாக நாடகத்துறையில் சங்கரதாஸ் பணியாற்ற தொடங்கினார்.

  தமிழில் மட்டும் 40 நாடக நூல்களை இவர் எழுதியுள்ளார். சங்கரதாஸின் மறைவைத் தொடர்ந்து, அவருக்காக நினைவுக் கூட்டங்கள் பலமுறை சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

  காந்தாராவைப் போன்று ஓ.டி.டி.யில் மிஸ் பண்ண கூடாத 7 சூப்பர் த்ரில்லர் படங்கள்…

  இந்நிலையில் இன்று அவரது 100ஆவது நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நினைவு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பங்கேற்று, குத்தாட்டம் போட்டு மற்ற கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

  இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

  விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

  வெந்து தணிந்தது காடு பட ஹீரோயின் சித்தி இட்னானி முதியோர் இல்லத்திற்கு சென்று உணவளித்தார்

  இதை தவிர்த்து காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Vijay Antony