Home /News /entertainment /

இலங்கையிலும் விஜய் ரசிகர் பட்டாளம்.. ஆட்டோக்கள் எங்கும் விஜய் போஸ்டர்கள்!

இலங்கையிலும் விஜய் ரசிகர் பட்டாளம்.. ஆட்டோக்கள் எங்கும் விஜய் போஸ்டர்கள்!

இலங்கை விஜய் ரசிகர்கள்.

இலங்கை விஜய் ரசிகர்கள்.

இலங்கை தமிழர்கள் மத்தியிலும் ரசிகர் பட்டாளத்தை நடிகர் விஜயும் நயன்தாராவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான சினிமா நட்சத்திரமாக இருக்கிறார் விஜய். அவருக்கு தமிழகத்தைக் கடந்தும் மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர்.

    அதே போல் விஜய்க்கு இலங்கையிலும் தீவிர ரசிகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் தமிழகத்தைப் போலவே ஆட்டோக்களில் விஜய் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    இது குறித்து நியூஸ் 18க்கு பேட்டியளித்த இலங்கையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சசி “இங்கு விஜய் படங்கள் வெளியானால் சிறப்பாக ஓடும். இங்குள்ளவர்களில் 90% விஜய் ரசிகர்கள்தான். நான் அவருடைய படங்களை உடனே பார்த்துவிடுவேன். அவருடைய மாண்புமிகு மாணவன் படத்திலிருந்தே நான் அவரது ரசிகர்.” என தெரிவித்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)






    விஜயைப் போலவே நயன்தாராவுக்கும் ரசிகர்கள் அதிக அளவில் இலங்கையில் உள்ளனர். நயன்தாரா படங்களும் இலங்கை ஆட்டோக்களில் இடம்பெற்றுள்ளது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Actor Vijay, Srilanka

    அடுத்த செய்தி