அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஜய்!

அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஜய்!
நடிகர் விஜய்
  • Share this:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியிலும் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். முதல்முறையாக கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், மாணவர்களும், தனது ரசிகர்களும் பின்பற்றும் வகையில் அங்கு மரம் நட்டு வைத்துள்ளார்.

கடைசி நாள் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்டிருந்த செல்ஃபி மட்டுமே பிரபலமான நிலையில் தற்போது நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்திருப்பதையும் ரசிகர்கள் வெளி உலகுக்கு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரசிகர்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் விஜய் பெயரும், மற்றொன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரும் இடம்பெற்றுள்ளது.


இப்பதிவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் மரம் நடுவதில் அதிக ஆர்வம் கொண்டு, அவரவர் வாழும் பகுதிகளில் மரம் நட்டு அதை சமூகவலைதளங்களில் புகைப்படமாக பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் இச்செயலுக்குப் பின் ரசிகர்கள் மரம் நடுவதை அதிகப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading