விஜய் 65: ’Beast’ தமிழ் அர்த்தம் என்ன?

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது.

 • Share this:
  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

  மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

  ஜார்ஜியாவில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

  ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் 6-வது திரைப்படமாக நேரடி ஆங்கில வார்த்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என நேரடி பொருள் ஆக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது.

  இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத் மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். இவை தவிர கில்லி, பிகில் வட்டார வழக்கு சொற்களையும் தலைப்பாக வைத்து நடித்துள்ளார். விஜயின் 65வது திரைப்படத்தின் பெயர் டார்கெட் என பொதுவாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்த நிலையில் பீஸ்ட் என்ற பெயரை மிகவும் ரகசியமாக வைத்து படக்குழுவினர் தற்போது அதனை வெளியிட்டுள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: