Home /News /entertainment /

நடிகரின் வீட்டுக்கு நேரில் சென்று திருமண வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நடிகரின் வீட்டுக்கு நேரில் சென்று திருமண வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நடிகர் வெற்றி திருமணம்

நடிகர் வெற்றி திருமணம்

நேற்று வெற்றியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

    சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் வெற்றியை அவரது வீட்டில் சந்தித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இளம் நடிகரான வெற்றி '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சில நாட்களுக்கு முன் அவர் ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் முழு ஊரடங்கு தினமான நேற்று வெற்றியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தியுள்ளார். அவரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த வெற்றி, அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    சுவாரஸ்யமாக, பெரும்பாலும் தாடியுடன் காணப்பட்ட வெற்றி, திருமணத்திற்காக தனது தாடியை சுத்தமாக ஷேவ் செய்து, புதிய தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கிறார். நடிப்பை பொறுத்தவரை வெற்றி தற்போது 'மெமரிஸ்', 'தென்கரை', 'ஜோதி' மற்றும் 'பம்பர்' படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: MK Stalin, Tamil Cinema

    அடுத்த செய்தி