Home /News /entertainment /

டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது தமிழின் அதிவன்முறை திரைப்படம்

டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது தமிழின் அதிவன்முறை திரைப்படம்

ராக்கி

ராக்கி

ராக்கி படம் இதுவரை தமிழில் எடுக்கப்பட்டதிலேயே அதிக வன்முறைகள் நிறைந்த படம் என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஒரு வழியாக விக்னேஷ் சிவன் அறிவித்துவிட்டார். ராக்கி திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ராக்கி. தரமணி வசந்த் ரவி, பாரதிராஜா பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். பாரதிராஜா இதில் வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. படம் முடிந்து பல வருடங்கள் ஆகிறது. படத்தின் ட்ரெய்லரும் முன்பே வெளியானது. இவ்வளவு ஏன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கிக்குப் பிறகு சாணிக்காயிதம் என்ற படத்தை செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எடுத்து, அப்படம் 2022 ஜனவரி வெளியாகவும் போகிறது.
ராக்கிக்கு ஏன் இந்த தாமதம்?

ராக்கியை ஆர்ஏ ஸ்டுடியோஸ் மனோஜ் குமார் தயாரித்திருந்தார். படம் பிடித்து போய் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படத்தை வாங்கினர். ஆனால், என்ன காரணமோ இத்தனை நாள் படத்தை வெளியிடாமலே வைத்திருந்தனர். இதற்கு அடுத்து தயாரான சாணிக்காயிதமே வெளியாகப் போகிறது என்ற நிலையில், பட வெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கி டிசம்பர் 23 படம் வெளியாகும் என விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன், தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ராக்கி படம் இதுவரை தமிழில் எடுக்கப்பட்டதிலேயே அதிக வன்முறைகள் நிறைந்த படம் என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். அருண் மாதேஸ்வரனின் சாணிக்காயிதமும் அதிவன்முறை காட்சிகள் நிறைந்தது. ராக்கியை திரையரங்கில் வெளியிடுவதையே திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக் கொள்கிறார்கள். ராக்கி மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை ஏற்படும் என்பது தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பு.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Vignesh Shivan

அடுத்த செய்தி