Home /News /entertainment /

திரையரங்கில் இன்று வெளியானது வைபவின் பபூன் படம்!

திரையரங்கில் இன்று வெளியானது வைபவின் பபூன் படம்!

பபூன்

பபூன்

க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் வைபவ் நடித்துள்ள 'பபூன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்திருக்கு படம் ‘பபூன்’. இயக்குநர் அசோக் வீரப்பன், கார்த்திக் சுப்பராஜிடம் ‘பீட்சா’ , ‘ஜிகர்தண்டா’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.

    முன்னதாக ஜோஜு ஜார்ஜ், கார்த்திக் சுப்பராஜின் 'ஜெகமே தந்திரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும், கிராமத்து பாடல்களால் கவனம் பெற்ற அந்தக்குடி இளையராஜா படத்தில் நடித்துள்ளார். வைபவ்வுக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார். இவர்களைத் தவிர நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    Also read... இயக்குநராக மாறிய துருவ் விக்ரம் - வெளியானது மனசே இசை வீடியோ!



    க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, New movie

    அடுத்த செய்தி