இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடுகிறார். மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா மதுரையில் நடத்தும் இசை நிகழ்ச்சியில், நடிகர் வடிவேலு பங்கேற்று பாட உள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இளையராஜா சமீபத்தில் சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இதை தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி மதுரையில் ஒரு இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடுகிறார்.
இதை நடிகர் வடிவேலு வீடியோ வாயிலாக அறிவித்துள்ளார். அதில் நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டினத்திற்கு எங்கள் இசைஞானி கச்சேரி நடத்த வருகிறார். இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கண்டிப்பாக நானும் அந்தக் கச்சேரிக்கு வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் தரையில் பாடிக்கொண்டிருந்த தன்னை, திரையில் பாட வைத்தது இளையராஜாதான். பாட்டு பாடுவதற்கு எனக்கு பிள்ளையார்சுழி போட்ட இளையராஜா அவர்களின் மதுரை நிகழ்ச்சியில் பாடி உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுவேன் என கூறியிருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்த வடிவேலு சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.