ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலக நாடுகள் அணு குண்டுகளை புதைத்துவிடுங்கள் - வடிவேலு உருக்கமான வீடியோ

உலக நாடுகள் அணு குண்டுகளை புதைத்துவிடுங்கள் - வடிவேலு உருக்கமான வீடியோ

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

பிள்ளைகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்துக்கும் அவர்கள் மனதில் நிற்கும். நமக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்று கூறி நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “போர் தான் நடந்து கொண்டிருக்கிறது. யார் பார்த்த வேலையோ, என்னவோ இப்படி ஒரு வேலை பார்ப்பாய்ங்களா? உயிர்களெல்லாம் சாக வேண்டும். கார், கட்டடம், வீடு வாசல் எல்லாம் இருக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் செய்திருக்கிறார்கள். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும். மருத்துவ உலகம் திணறுகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். மருத்துவர்கள் எல்லாம் நமக்கு கடவுள்கள்.

  இப்ப இந்த வீட்டத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன் என்கிறார்கள். அது கோடு. இது வீடு( வின்னர் பட காமெடியை நினைவு கூர்கிறார்) கோடு, வீடு, ரோடு எதையும் தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்னா ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக.

  பிள்ளைகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்துக்கும் அவர்கள் மனதில் நிற்கும். நமக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம். கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை சொல்லிக் கொடுத்தால் பிற்காலத்தில் அக்குழந்தைகள் மருத்துவர்களாக வந்தாலும் சரி, நாட்டையே ஆள்பவராக இருந்தாலும் சரி இது குழந்தைகளுக்கு ஒரு பாடம் தானே. இந்தப் பாடத்தை குழந்தைகளுக்கு நடத்திவிட்டால் வேறு என்ன இருக்கு இந்த உலகத்தில். சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். இதைவைத்து குழந்தைகளை வளர்த்துவிட வேண்டும்” இவ்வாறு நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Vadivelu