’தமிழக முதல்வரை பாத்ததுல இருந்து நேரம் நல்லாருக்கு’ வடிவேலு பெருமிதம்!

வடிவேலு - மு.க.ஸ்டாலின்

‘பிரச்னையை முடித்து வைத்த லைகா சுபாஸ்கரன் ஒரு சபாஸ்கரன்’ என்றார் வடிவேலு.

 • Share this:
  தமிழக முதல்வரைப் பார்த்ததிலிருந்து நேரம் நன்றாக இருப்பதாக, நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் அவர் படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

  இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. தற்போது இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. அதோடு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

  இது குறித்து முன்னணி இணையதளம் ஒன்றிற்கு ஃபோனில் பேசிய வடிவேலு, ‘பிரச்னையை முடித்து வைத்த லைகா சுபாஸ்கரன் ஒரு சபாஸ்கரன்’ என்றார். இது தனது மறுபிறவி என்று கூறிய வடிவேலுவிடம், இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு, ‘தமிழக முதல்வரை பாத்துட்டு வந்ததுல இருந்து எனக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கு. தமிழக மக்களுக்கும் நேரம் நல்லாருக்கு’ என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்ததாக லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்கவிருக்கும் வடிவேலு, லைகா நிறுவனத்தின் அடுத்த 5 படங்களிலும் நடிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார். வடிவேலு நடிக்காமல் இருந்த இத்தனை ஆண்டுகளில் காமெடி வறட்சி ஏற்பட்டிருந்த தமிழ் சினிமா, இனி மீண்டும் புத்துயிர் பெறும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: