ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வாரிசா'.. 'துணிவா'.. முதலில் எந்த படம் பார்ப்பீங்க? - சிரித்துக்கொண்டே பதிலளித்த வடிவேலு!

'வாரிசா'.. 'துணிவா'.. முதலில் எந்த படம் பார்ப்பீங்க? - சிரித்துக்கொண்டே பதிலளித்த வடிவேலு!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு நேற்றிரவு (டிசம்பர். 23) சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்செந்தூர் கோயிலில் நடிகர் வடிவேலு சென்றபோது வாரிசா? துணிவா? எந்த படத்தை பொங்கலுக்கு முதலில் பார்ப்பீங்க என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில், சிராஜ் இயக்கத்தில் வெளியான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் கடந்த டிச. 9ஆம் தேதி வெளியானது. தலைநகரம் படத்தில் வடிவேலுவின் மிக பிரபலமான கதாபாத்திரத்தை அடிப்பைடயாக வைத்து இந்த படம் உருவானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், 'லொள்ளு சபா' மாறன், மனோபாலா, 'லொள்ளு சபா' சேசு, டி.எம்.கார்த்திக், 'கேபிஒய்' ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also read... அடுக்கடுக்கான கேள்விகளுடன் அசீமை கண்டித்த கமல் - பதிலளிக்க முடியால் நின்ற அசீம்!

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு நேற்றிரவு (டிசம்பர். 23) சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வாரிசா? துணிவா? பொங்கலுக்கு முதலில் எந்த படம் பார்ப்பீங்க என்று செய்தியாளர் வடிவேலுவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vadivelu, Actor Vijay, Thunivu, Varisu