முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நாய்சேகர் படத்தின் போஸ்டர்

நாய்சேகர் படத்தின் போஸ்டர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.  மேலும் சரியான வெளியீட்டு தேதிக்காக தயாரிப்பு நிறுவனம் காத்திருந்தது.

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் விமர்சனம்… இந்த முறையாவது வெற்றி பெற்றாரா சந்தானம்?

இந்த நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தன. அதை தற்போது தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் பல நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அந்த திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார்.  அதில் இடம்பெறும் அப்பத்தா பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

' isDesktop="true" id="844686" youtubeid="N-pvp7GSD3Y" category="cinema">

அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் விரைவில் படத்தின் பாடல்களையும் ட்ரெய்லரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் வணங்கான் படத்தில் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

top videos

    இந்த படத்தை தவிர்த்து உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். இவர்களுடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    First published:

    Tags: Actor Vadivelu