Home /News /entertainment /

Exclusive: கேக் வெட்டி, பிரியாணி கொடுத்து எனது பிறந்த நாளை அசத்திவிட்டர் உதயநிதி - வடிவேலு நெகிழ்ச்சி

Exclusive: கேக் வெட்டி, பிரியாணி கொடுத்து எனது பிறந்த நாளை அசத்திவிட்டர் உதயநிதி - வடிவேலு நெகிழ்ச்சி

வடிவேலு

வடிவேலு

Exclusive: நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, பிரியாணி கொடுத்து உதயநிதி ஸ்டாலின் எனது பிறந்த நாளிற்காக ஏற்பாடுகளை செய்து அசத்தி விட்டார் என வடிவேலு நெகிழ்ச்சியுடன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேசிய அவர்,  மாமன்னன் திரைப்படத்தில் பிறந்த நாளை கேக் வெட்டி,  பிரியாணி கொடுத்து கொண்டாடியதாக தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை உதயநிதி அசத்தி விட்டார் எனவும் பெருமிதம் அடைந்தார்.

மாமன்னன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் மிகச் சிறப்பாக எடுத்து வருகிறார். மக்களின்  வாழ்வியலை அப்படியே படமாக்குகிறார் எனவும் தெரிவித்தார்.

Also read... ரகுவரனின் காதலுக்கு 'நோ' சொன்ன அமலா

அத்துடன் மாரி செல்வராஜ் மிகச்சிறந்த இயக்குனர் எனவும் பாராட்டினார். மேலும் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் வடிவேலு தெரிவித்தார்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் நம்பர் ஒன் படமாக இருக்கும். அதை அக்டோபர் 7-ம் தேதி வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vadivelu, Entertainment, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி