ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொடூர வில்லன் வடிவேலு.. அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

கொடூர வில்லன் வடிவேலு.. அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

மக்கள் அவரை அப்படி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூட இயக்குனர்கள் நினைத்து இருக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

  கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 2023  வருடத்தில்  வெளியாகவுள்ள பல படங்களில் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். காமெடியில் தனக்கென தனி பாதையை அமைத்து கொண்ட வடிவேலு முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு டூப் போட்ட சீரியல் நடிகை? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!

  பாடகர், ஹீரோ, காமெடி நடிகர், குணச்சித்திர ரோல் என பன்முகங்களை கொண்ட கலைஞராக அறியப்படும் வடிவேலு வில்லன் ரோலில் நடித்தது இல்லை. மக்கள் அவரை அப்படி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினால் கூட இயக்குனர்கள் தயங்கி  இருக்கலாம். ஆனால் இதுவரை வடிவேலுவை யாரும் பார்த்திராத வில்லன் லுக்கில் அவரை நடிக்க வைக்க இயக்குனர் ராம்பாலா டைரக்டு வடிவேலுவை அணுகி இருக்கிறார்.

  பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா?

  கதை கேட்டு வடிவேலுக்கு மிகவும் பிடித்து போக வில்லனாக நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நிறைய கொலைகளை செய்யும் கொடூர வில்லன் ரோலில் வடிவேலு நடிக்க இருப்பது அவரின் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Vadivelu, Kollywood, Tamil Cinema