ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் திரையில் வைகைப்புயல் வடிவேலு... டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது நாய்சேகர் ரிட்டன்ஸ்

மீண்டும் திரையில் வைகைப்புயல் வடிவேலு... டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது நாய்சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை டிசம்பர் 2வது வாரத்தில் வெளியிட ஆலோசனை. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேல் நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை டிசம்பர் இரண்டாம் வாரம் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் தற்போது வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்வதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தை தணிக்கைக்கு அனுப்பி உள்ளனர். 2 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடிய வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுராஜ். இந்த திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட முதலில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

 ஆனால் ஒரு சில காரணங்களால் நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனைத்து வருகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமாவுக்கு 28ம் தேதி திருமணம்.. உறவினர்கள் & நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு

படத்திற்கு தணிக்கை கிடைத்தவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வடிவேலு - சுராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடிவேலு நான்கு பாடல்களை  பாடியுள்ளார்.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Vadivelu, Kollywood