• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்

வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  • Share this:
    பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு
    "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று படத்தின் தலைப்பினை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வடிவேலு - சுராஜ் கூட்டணி தங்களுடைய படத்துக்கு புதிய தலைப்பு குறித்து பரிசீலித்து வந்தது. இறுதியாக 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.



    திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும்  பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: