Home /News /entertainment /

உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் வடிவேலு சந்திப்பு..

உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் வடிவேலு சந்திப்பு..

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு இன்று நட்பு ரீதியாக சந்தித்தார்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு இன்று நட்பு ரீதியாக சந்தித்தார்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு இன்று நட்பு ரீதியாக சந்தித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் அவர் படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. தற்போது இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. அதோடு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

    இதையடுத்து, புது உற்சாகத்தில் மீண்டும் திரைப்பிரவேசத்துக்கு வடிவேலு தயாராகி வருகிறார். சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, தமிழக முதல்வரை பாத்துட்டு வந்ததுல இருந்து எனக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கு. தமிழக மக்களுக்கும் நேரம் நல்லாருக்கு. தனக்கு எண்ட் கார்டு கிடையாது என்றும் உற்சாகமாக பதிலளித்தார்.

    முன்னதாக, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலம் வந்தார் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத சூழல் ஏற்பட்ட பிறகு அவர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அமைதியாக இருந்தார். குறிப்பாக அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பும் வெகுவாக குறையத் துவங்கியதும் அப்போதுதான் என சினிமாவுலகம் அறிந்திருக்கும்.

    Also read: உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல்!

    இதனிடையே, 2 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு இன்று நட்பு ரீதியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Vadivelu, Udhayanidhi Stalin, Vadivelu

    அடுத்த செய்தி