முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி2 படத்தின் சூப்பர் அப்டேட்… வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது…

சந்திரமுகி2 படத்தின் சூப்பர் அப்டேட்… வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது…

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு பாகுபலி படங்களுக்கு இசையமைத்த கீரவானி இசையமைத்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கேரக்டர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இதனால் நகைச்சுவை காட்சிகள் வேற லெவலில் அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா உள்ளிட்டோர் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் 2005-ல் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மெகா ஹிட்டானது.

இந்த படத்தில், டாக்டர் சரவணன் மற்றும் வேட்டையன் ராஜா என 2 கேரக்டர்களில் ரஜினி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ஆடியன்சையும் சந்திரமுகி திரைப்படம் திருப்தி அடையச் செய்தது.

பிக் பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்துக்கு கடும் எதிர்ப்பு

இந்நிலையில் சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு பாகுபலி படங்களுக்கு இசையமைத்த கீரவானி இசையமைத்து வருகிறார்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு இடம்பெற்றிருக்கிறார். இதில் வடிவேலுவின் கேரக்டர் பெயர் முருகேசன் என தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல் பாகத்திலும் இதே கேரக்டரில்தான் வடிவேலு நடித்திருப்பார்.

சுற்றுலா செல்லும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்!

முருகேசா என்று ரஜினி அழைக்கும்போது வடிவேலு கொடுக்கும் பாடி லேங்குவேஜ் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்நிலையில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் சந்திரமுகி 2 படம் எடுக்கப்பட்டு வந்தாலும் அதில் வடிவேலுவின் கேரக்டர் முருகேசன் என அமைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்கிறது.

இதேபோன்று உதயநிதி ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் படத்திலும் வடிவேலு அவருக்கு தந்தை கேரக்டரில் நடித்து வருகிறார்.

First published:

Tags: Actor Vadivelu