Home /News /entertainment /

’கலைஞரை பார்ப்பதைப் போலுள்ளது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தியாகராஜன்-பிரசாந்த்!

’கலைஞரை பார்ப்பதைப் போலுள்ளது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தியாகராஜன்-பிரசாந்த்!

முதல்வருடன் தியாகராஜன் - பிரசாந்த்

முதல்வருடன் தியாகராஜன் - பிரசாந்த்

நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

    நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது மகனும் நடிகருமான பிரசாந்த் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண திதி வழங்கினர்.

    சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. தினமும் 30,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின. அந்த சமயத்தில் தமிழகத்தில் ஆட்சி மாறியது. புதிதாக பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.

    அதோடு படுக்கை, ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவைகள் இருந்ததால், “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என எல்லோரும் முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தியாகராஜன், பிரசாந்த் இருவரும், முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடும் சிறப்பாக இருப்பதாகவும், மிகவும் கடினமாக உழைத்து வருகிறார், கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது எனவும் தெரிவித்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Prashanth, MK Stalin

    அடுத்த செய்தி