பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் கவலைக்கிடம் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

news18
Updated: November 9, 2019, 1:41 PM IST
பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் கவலைக்கிடம் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
நடிகர் தென்னவன்
news18
Updated: November 9, 2019, 1:41 PM IST
52 வயதான நடிகர் தென்னவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விருமாண்டி, சண்டக்கோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் தென்னவன். 52 வயதான இவர் தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தீராத தலைவலியால் துடித்த தென்னவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி ஒன்று வளர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் தென்னவனைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...