ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

3 நாட்கள் ஐ.டி ரெய்டு... என்ன நடந்தது? - நடிகை டாப்ஸி விளக்கம்

3 நாட்கள் ஐ.டி ரெய்டு... என்ன நடந்தது? - நடிகை டாப்ஸி விளக்கம்

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

3 நாட்களாக நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து நடிகை டாப்ஸி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3-ம் தேதி முதல் சோதனை நடத்தினர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர் விகாஸ் பால், பாண்டம் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளையில் அனுராக் காஷ்யப், டாப்சி மற்றும் விகாஸ் பால் ஆகிய மூவரும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளை வெளிப்படுத்தியதால் தான் ஐ.டி ரெய்டு நடத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

மும்பை மற்றும் புனேவில் டாப்ஸி மற்றும் காஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இன்று முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 3 நாட்கள் நடந்த தீவிர சோதனைக்குப் பின்னர் சில முக்கியமான விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாரிஸில் எனக்கு இருப்பதாக அவர்கள் சொல்லும் பங்களாவிற்கான சாவி. கோடை விடுமுறை நெருங்குகிறதல்லவா?

இரண்டாவதாக என் பெயரில் இருப்பதாக சொல்லப்படும் ரூ.5 ரூபாய்க்கான ரசீது. அந்தப் பணம் வேண்டாம் என்று நிராகரித்தது. அதை எடுத்து ஃபிரேம் செய்து எதிர்காலத்தில் எனக்கு தரப்போகிறார்கள்.அவ்வளவு மலிவானவள் இல்லை” என்று நகைச்சுவை தொனியில் கூறியிருக்கிறார். மேலும் 2013-ம் ஆண்டில் எந்த வருமானவரி சோதனையும் நடக்கவில்லை என்றும் டாப்ஸி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் #DoBaaraa படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விட்டதாக டாப்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: IT Raid, Taapsee Pannu