முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார் டி ராஜேந்தர்...!

சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார் டி ராஜேந்தர்...!

உஷா ராஜேந்தர், சிம்பு மற்றும் டி.ராஜேந்தர்

உஷா ராஜேந்தர், சிம்பு மற்றும் டி.ராஜேந்தர்

அறுவை சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார் டி.ராஜேந்தர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வீடு எடுத்து தங்கியுள்ளார். சனி கிழமைக்கு பிறகு எப்போது சென்னை திரும்புவார் என முடிவெடுக்கப்படும். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. 

நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர்க்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூர் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் அவரின் வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.  இதைத்தொடர்ந்து முதல் கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்ட டி.ராஜேந்தர், கடந்த 14-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அவருடன் உஷா ராஜேந்தர், குறளரசன் உள்ளிட்ட குடும்பத்தினரும், மருத்துவரும்  சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சிலம்பரசன் முன்கூட்டியே அமெரிக்க சென்று கவனித்து வந்தார்.

இந்த நிலையில் டி.ராஜேந்தருக்கு ரத்தக்கசிவு இருந்த பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அத்துடன்  நேற்று முந்தினம் டிஸ்சார் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தர் தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.  சிகிச்சைக்கு பிந்தை சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அங்கு தங்கியுள்ளனர்.

Also read... உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது யானை திரைப்படம்

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில்  வரும் சனிக்கிழமை டி.ராஜேந்தருக்கு  மீண்டும் மருத்துவ பரிசோதனை உள்ளது.  அதை முடித்தபிறகு  எப்போது சென்னை திரும்புவார் என முடிவெடுக்கப்படும் என டி. ராஜேந்தர் தரப்பினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் டி.ராஜேந்தர் சிலம்பரசன் மற்றும் உஷா ராஜேந்தர் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Simbu, T Rajendar