மனநலனுக்கு முன்பை விட கூடுதல் அக்கறை அளிக்கப்படவேண்டும் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

முன்பு எப்போதையுவிட மனநலன் சார்ந்த விஷயங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

மனநலனுக்கு முன்பை விட கூடுதல் அக்கறை அளிக்கப்படவேண்டும் - விவிஎஸ் லக்‌ஷ்மண்
sushant singh rajput
  • Share this:
முன்பு எப்போதையுவிட மனநலன் சார்ந்த விஷயங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் நாடு முழுவதும் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. சுஷாந்த் சிங்கின் மரணத்துக்கு  பிரதமர் மோடி மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சையை சுஷாந்த் எடுத்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி, சுஷாந்தின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண், ”மனநலம் என்பது மிகத் தீவிரமான விஷயம். முன்பை விட அதில் கூடுதல் முக்கியத்துவம் தேவை. பொறுமையுடனும், தொடர்ச்சியாகவும், கனிவுடனும் மனநலனை வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.மன அழுத்தத்தில் இருக்கும் எவரும் உடனடியாக மருத்துவர், நண்பர்கள், குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள் என்று தெரிவித்துள்ளார் லக்‌ஷ்மண்.
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading