கடந்த வாரம் சூர்யா ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், சூர்யா அந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் சூர்யா ரசிகர் மன்ற செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்தவர் ஜெகதீஷ். இவர் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளர்ஜெகதீஷ் மறைவு குறித்த அறிந்த சூர்யா, இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குழந்தைகளுக்கும் அவர் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ரசிகர் மன்றத்தின் செயலாளர் இறந்த சம்பவம் கேட்டு அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.