• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Surya : ’’ 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் நான்’’- மனம் திறந்த சூர்யா

Actor Surya : ’’ 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் நான்’’- மனம் திறந்த சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

Surya To Work With Director Bala : பாலா இயக்கத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். 

  • Share this:
    சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் நந்தா. எந்தத் திசையில் சொல்வது என்று புரியாமல் எல்லாப் பக்கமும் முட்டி மோதிக் கொண்டிரந்த சூர்யாவுக்கு கலங்கரை விளக்கமாக நந்தா அமைந்தது. பாலா அந்தப் படத்தில் சூர்யா என்ற நடிகனை உருவாக்கினார். அதன் பிறகே சூர்யாவின் திரைவாழ்க்கை தீபாவளி ராக்கெட்டாக உயர ஆரம்பித்தது. 

    அடுத்து பிதாமகன் படத்தில் நந்தாவுக்கு எதிரான ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைத்தார். பாலா தயாரித்த மாயாவி படம் சூர்யாவின் நகைச்சுவை நடிப்புக்கு சான்றாக அமைந்தது. சூர்யாவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது பாலா என்றால் மிகையில்லை.

    also read : இன்ஸ்டாகிராமில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய சமந்தா..

    வர்மா படத்தில் தயாரிப்பாளருக்கும், பாலாவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தயாரிப்பாளர் படத்தையே கைவிட்டது பாலாவுக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், பாலாவின் புதிய படத்தை யார் தயாரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் பாலாவின் படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் அதர்வா நடிப்பார், சூர்யா கௌரவ வேடம் செய்கிறார் என்றும், அதர்வாதான் ஹீரோ சூர்யா நடிக்கவில்லை எனவும்  பல்வேறு யூகங்கள் சொல்லப்பட்ட நிலையில், பாலா இயக்கத்தில் நடிப்பதை நேற்று தனது ட்விட்டரில் உறுதி செய்தார் சூர்யா.


    நேற்று தனது தந்தை சிவகுமாரின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு பாலா, சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சூர்யாஎன்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்..அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்' என அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பாலா இயக்கத்தில் நடிப்பதை சூர்யா உறுதி செய்துள்ளார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: