ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றி மாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழில் மெகா ஹிட்டான ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இதே கூட்டணி இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் சூர்யா மீண்டும் இணைகிறார்.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றி மாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலா படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - வித்தியாசமான கதை, வில்லங்கமான உறவுகள்... செல்வராஜின் பொண்ணு ஊருக்கு புதுசு!

வாடிவாசல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகளுக்காக சில காலம் இடைவெளி தேவைப்படும். இதேபோன்று வெற்றி மாறன் தான் இயக்கிய விடுதலை படத்தை இன்னும் முடிக்காமல் இருக்கிறார். இந்த இடைவெளியில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட சூர்யா திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க - ஜெய்பீம் பட தயாரிப்பாளர்கள் சூர்யா - ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு...

இதுதொடர்பான கதைக்கு சூர்யா ஓகே சொல்லியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே,  சூர்யா 41 படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் கோபமடைந்த சூர்யா அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. 

First published:

Tags: Actor Surya, Jai Bhim