முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’

ஜெய்பீம்

ஜெய்பீம்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச திரைப்பட திருவிழாவின் அங்கமான இந்தியன் பனோரமா வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் 25 ஃப்யூச்சர் மற்றும் 20 Non Feature படங்கள் திரையிடப்படவுள்ளன. 53-ஆவது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி – 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் திரையிடப்படும் படங்களை தேர்வு செய்ய சினிமாத்துறை வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 354 ஃப்யூச்சர் படங்கள் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

’என் பிரின்சஸ் பிறந்தநாள்’.. க்யூட்டான படத்தை பகிர்ந்த ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயன்

இந்த 25 படங்களில் தமிழில் வெளிவந்த ஜெய்பீம் (இயக்குனர் தா.செ. ஞானவேல்), கிடா (இயக்குனர் ஆர்.ஏ. வெங்கட்) ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன.

மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஆர்.ஆர்.ஆர்., டானிக், அகன்டா, தர்ம்வீர் முக்கம் போஸ்ட் தானே ஆகிய 5 படங்கள் தேர்வாகியுள்ளன.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றிருப்பதை சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் நடந்த ‘துணிவு’ ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜித்… ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார்.

top videos

    சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு - பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

    First published:

    Tags: Jai Bhim, Kollywood