நீட் விவகாரம்: சூர்யாவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு?

நீட் விவகாரம்: சூர்யாவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு?

சூர்யா

நீதிபதிகள் உயிருக்கு பயந்து காணொலியில் வழக்குகளை விசாரிப்பதாக கூறும் நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என சூர்யா கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

  இது நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் தவறாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க... உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது - சூர்யா காட்டம்  எனவே, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்தும்படி நீதிபதி சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: