முகப்பு /செய்தி /entertainment / எதற்கும் துணிந்தவன் அடுத்த அப்டேட்டை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

எதற்கும் துணிந்தவன் அடுத்த அப்டேட்டை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4-ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த அப்டேட்டை அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் கடைசி இரு படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் இரண்டும் ஓடிடியில் நேரடியாக வெளியானதால் விரக்தியில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு திரையரங்கில் விருந்து வைக்கப் போகும் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும். பாண்டிராஜ் கிராமத்துப் பின்னணியில் சென்டிமெண்டும் அதற்கு குறையாத ஆக்ஷனும் கலந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : நடிகை ரித்திகா சிங்கின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..

இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். எதற்கும் துணிந்தவனில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக புத்தாண்டையொட்டி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். புதுவருடத்தில் படத்தின் புரமோஷனை தொடங்கும் விதமாக ஜனவரி 1-ம் தேதி டீஸர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மெரூன் தாவணியில் மனசை கொள்ளையடித்த பாக்கியலட்சிமி சீரியல் ‘ஜெனி’..

படத்திலிருந்து ஒரு பாடல் வெளியான நிலையில், நாளை மாலை 6 மணிக்கு இன்னொரு பாடல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏற்கெனவே பிப்ரவரி 4-ம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பிப்ரவரி 4-ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஓ ரசிக்கும் சீமானே வா..! கருப்பு நிற புடவையில் கலங்கடிக்கும் ராஷ்மிகா மந்தனா..

First published:

Tags: Actor Suriya, Sun pictures